மருத்துவமனையில் பிரபல நடிகர்: வைரலாகும் போட்டோ!

மருத்துவமனையில் பிரபல நடிகர்: வைரலாகும் போட்டோ!
மிதுன் சக்கரவர்த்தி

பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இந்தி, பெங்காலி, போஜ்புரி உட்பட பல்வேறு மொழிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடித்த, ‘யாகாவாராயினும் நாகாக்க’ என்ற படத்தில் நடித்திருந்தார். கடைசியாக, கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் நடித்திருந்தார்.

அவர் மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் திடீரென பரவின. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபற்றி மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மகாக்‌ஷய் சக்கரவர்த்தி கூறும்போது, ``கடந்த சில நாட்களுக்கு முன், காய்ச்சல், வயிற்று வலி மற்றும் சிறுநீரக கல் பிரச்சினைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அப்பா அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த புகைப்படம்தான் அது. இப்போது அவர் குணமடைந்துவிட்டார். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை'’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.