காணாமல் போன நடிகை பவுலின் ஜெஸிகாவின் ஐபோன் மீட்பு: வீடியோக்கள் அழிப்பா ?

காணாமல் போன நடிகை பவுலின் ஜெஸிகாவின் ஐபோன் மீட்பு:  வீடியோக்கள் அழிப்பா ?

சென்னையில் தற்கொலை செய்துகொண்ட நடிகை பவுலின் ஜெஸிகாவின் காணாமல் போன ஐபோனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதில் இருந்த தகவல்கள், வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

அறிமுக இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 'வாய்தா'. இந்தப்படத்தில் நடிகை தீபா என்கிற பவுலின் ஜெஸிகா நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு முன்னதாக அவர் விஷாலின் 'துப்பறிவாளன்' படத்தின் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

கடந்த 18-ம் தேதி தனது வீட்டில் , துப்பட்டாவால் தூக்கிட்டு பவுலின் ஜெஸிகா தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனையடுத்து அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் நேரில் சென்று பார்த்தபோது, பவுலின் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், காதல் கைகூடவில்லை என்பதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பவுலின் தற்கொலை செய்து கொண்டதை, முதல் ஆளாக கதவை உடைத்துப்பார்த்த பிரபாகரனிடமிருந்து அவரது ஐபோன் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகை பவுலின் பயன்படுத்திய மூன்று செல்போன்கள், ஒரு டேப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் மீட்கப்பட்ட ஐபோனில் மெசேஸ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஏதேனும் அழிக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய தடயவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

பிரபாகரனிடம் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், பவுலின் காதலன் சிராஜுதீன் வாங்கி கொடுத்த ஐபோன் என்பதால் அதை தான் எடுத்து வந்ததாக பிரபாகரன் கூறியிருக்கிறார். மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சிராஜுதினிடம் பவுலின் வாக்குவாதம் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து சிராஜுதீன் தம்மை உடனடியாக பவுலின் வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். கைப்பற்றப்பட்டுள்ள மூன்று செல்போன்கள் மற்றும் டேப்-இல் உள்ள விவரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் காதலன் சிராஜுதீனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கோயம்பேடு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in