விளம்பரப் படத்தில் தவறான தகவல் தந்ததாக பிரபல நடிகர் மீது பாய்ந்தது வழக்கு!

விளம்பரப் படத்தில் தவறான தகவல் தந்ததாக பிரபல நடிகர் மீது பாய்ந்தது வழக்கு!

தவறானத் தகவலை விளம்பர படத்தில் தந்ததற்காக பிரபல நடிகர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். 'புஷ்பா' படம் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியிருக்கும் இவர், திரைப்படங்களுடன் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள 'ரேபிடோ' விளம்பரம் கடந்த சில மாதங்களுக்கு முன் சர்ச்சையானது. அதில் தெலங்கானா மாநில சாலை போக்குவரத்து குறித்து தவறாக காட்டுவதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை செய்தார்.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் மீது மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. அவர், சைதன்யா கல்வி நிறுவனங்கள் குறித்த விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் ஐஐடி மற்றும் என்ஐடி தரவரிசை குறித்து கூறப்பட்டுள்ளது. அது தவறான தரவரிசை தகவல் எனக் கூறி, கோதா உபேந்தர் ரெட்டி என்ற சமூக ஆர்வலர் அல்லு அர்ஜுன் மீது ஹைதராபாத் ஆம்பர்பேட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுபோன்ற தவறான விளம்பரங்களை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அல்லு அர்ஜுன் இதற்கு முன் நடித்த 'ஸோமோட்டோ' விளம்பரமும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in