கபடி, கபடி, கபடி; களத்தில் இறங்கி அசத்திய அமைச்சர் ரோஜா: வைரல் வீடியோ

கபடி, கபடி, கபடி; களத்தில் இறங்கி அசத்திய அமைச்சர் ரோஜா: வைரல் வீடியோ

ஆந்திர அமைச்சர் ரோஜா கிரிக்கெட், கபடி விளையாடி வீரர்களை உற்சாக ஏற்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் பிரசாந்த் நடித்த `செம்பருத்தி' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. இதன் பின்னர் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகனுடன் நடித்து பிரபலமானார். தற்போது, இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார் ரோஜா. தனது தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து வருவதோடு மக்களிடையே ஒன்றாகவே இணைந்து பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தனது சித்தர் தொகுதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரில் விளையாட்டு போட்டியை அமைச்சர் ரோஜா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, கபடி கிரிக்கெட் விளையாடி ரோஜா அசத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in