குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா: அசந்து போன ரசிகர்கள்

குத்துச்சண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா: அசந்து போன ரசிகர்கள்

விசாகப்பட்டினத்தில் குத்துச்சண்டை போட்டிய தொடங்கி வைத்த அமைச்சர் ரோஜா குத்துச்சண்டை விளையாடி ரசிகர்களை அரசவைத்தார்.

நடிகர் பிரசாந்த் நடித்த செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. இதன் பின்னர் ரஜினிகாந்த், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். தற்போது ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகிறார் ரோஜா. சித்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற நடிகை ரோஜா தனது தொகுதி மக்களின் இடையே நன்மதிப்பை பெற்று வருகிறார்.

ஆந்திராவில் பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து வரும் அமைச்சர் ரோஜா, அந்த போட்டியில் பங்கேற்று அசத்தி வருகிறார், அண்மையில் நகரியில் நடந்த கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளை அமைச்சர் ரோஜா தொடங்கிவைத்தார். இதன் பின்னர், கபடி, கிரிக்கெட் விளையாடி ரசிகர்களை அசரவைத்தார். இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் முதல்வரின் தேசிய குத்துச்சண்டை போட்டியை அமைச்சர் ரோஜா நேற்று இரவு தொடங்கி வைத்தார். அப்போது, ரோஜா குத்துச்சண்டை விளையாடினார். பெண் ஒருவரிடமும், ஆண் ஒருவரிடம் ரோஜா குத்துச்சண்டை விளையாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in