குடும்பத்துடன் சிரஞ்சீவியை சந்தித்தார் ரோஜா!

குடும்பத்துடன் சிரஞ்சீவியை சந்தித்தார் ரோஜா!

ஆந்திர அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகை ரோஜா, நடிகர் சிரஞ்சீவியை குடும்பத்துடன் சந்தித்தார்.

1990களில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்துகொண்ட இவர், பிறகு நடிப்பதைக் குறைத்துவிட்டு ஆந்திர அரசியலில் தீவிரமாக களமிறங்கினார். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், நகரி தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ ஆனார். அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் ரோஜா அமைச்சரானார். அவருக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவைச் சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், நடிகர் சிரஞ்சீவியையும் சந்தித்தார். ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்ற அவரை, நடிகர் சிரஞ்சீவியும் அவரது மனைவியும் வரவேற்றனர்.

ரோஜாவுடன் அவரது கணவர், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மகன், மகள் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.