`லைகர்’ டப்பிங்கை முடித்தார் மைக் டைசன்

’லைகர்’ படத்துக்கு டப்பிங் பேசும் மைக் டைசன்
’லைகர்’ படத்துக்கு டப்பிங் பேசும் மைக் டைசன்

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்துக்கான டப்பிங் பணியை மைக் டைசன் முடித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம், ’லைகர்’. பான் இந்தியா முறையில், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. படத்தை புரி ஜெகநாத் இயக்குகிறார். இந்தி நடிகை அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். மற்றும் ரம்யா கிருஷ்ணன், அலி பாஷா, ரோனித் ராய் உட்பட பலர் நடிக்கின்றனர்.

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு மணி சர்மா இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு, தாய்லாந்து, மும்பை, ஹைதராபாத் உட்பட பல பகுதிகளில் நடந்துள்ளது. மைக் டைசன் பங்குபெறும் காட்சிகள் அமெரிக்காவில் நடந்துள்ளன.

இதன் படப்பிடிப்பு முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் மைக் டைசன் இந்தப் படத்துக்கு டப்பிங் பேசி முடித்திருக்கிறார். அவர் டப்பிங் பேசும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்தை புரி ஜெகநாத், நடிகை சார்மி, பிரபல இந்தி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் ஆகியோர் தயாரிக்கின்றனர். ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in