`இப்போதை பற்றியே நினைக்கிறேன்’: 2-வது திருமணம் குறித்து பிரபல நடிகை விளக்கம்

`இப்போதை பற்றியே நினைக்கிறேன்’: 2-வது திருமணம் குறித்து பிரபல நடிகை விளக்கம்

மறுமணம் செய்துகொள்வது பற்றி பிரபல நடிகை மனம் திறந்துள்ளார்.

தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் மேக்னா ராஜ். பிரபல நட்சத்திர தம்பதியான சுந்தர் மற்றும் பிரமிளாவின் மகளான இவர், கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் மரணமடைந்தார். அப்போது மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார். பின்னர் ஆண் குழந்தை பிறந்தது. கணவர் இழந்த சோகத்தில் இருந்த மேக்னா, அதில் இருந்து மீண்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், அவர் 2-வது திருமணம் செய்து கொள்வது பற்றி கூறும்போது, ’’இது சமூகத்தின் மனநிலை என்று நினைக்கிறேன். என் கணவர் இறந்த பின்பு, குழந்தையை வளர்ப்பது, அவன் எதிர்காலம் பற்றி சிந்தித்து வருகிறேன். ஒரு கூட்டம் 2-வது திருமணம் செய்யுமாறு சொல்கிறது. சிலர், உங்கள் மகனுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்கிறார்கள். நான் எதைக் கேட்பது? நான் அந்த கேள்வியை இன்னும் என்னிடம் கேட்கவில்லை. இந்த தருணத்தை வாழ்ந்துவிட வேண்டும் என்று என் கணவர் சொல்வார். அதனால் நாளை என்ன நடக்கும் என்பது பற்றி யோசிப்பதில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றியும் நினைப்பதில்லை. நான் இப்போதை பற்றியே நினைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in