
’ஹே சினாமிகா’ படத்தின் ’மலையாளக் கரையோரம் / புயலொன்று வீசுதே’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல நடன இயக்குநர் பிருந்தா, இயக்குநராக அறிமுகமாகும் படம், 'ஹே சினாமிகா'. இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.
இந்தப்படம் வரும் வரும் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள ‘அச்சமில்லை’ என்ற பாடல், ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அடுத்து ’தோழி’ என்னும் பாடல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ’மலையாளக் கரையோரம் / புயலொன்று வீசுதே’ என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை, இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பாடியுள்ளார்.