சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இதற்குத் தான் இங்கிலாந்து சென்றார்களா?: வைரலாகும் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் நடிகர்கள்  இதற்குத் தான் இங்கிலாந்து சென்றார்களா?: வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர்கள், குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மம்மூட்டி, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நடித்த 'சிபிஐ டைரிகுறிப்பு' படத்தின் 5-ம் பாகம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அடுத்து டினே டென்னிஸ் இயக்கும் படம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இவருடைய மகன் நடிகர் துல்கர் சல்மான். மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள இவர், தமிழ், தெலுங்கு, இந்தியிலும் நடித்து வருகிறார். இப்போது ’சீதா ராமம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், அவர் ஜோடியாக இந்தி நடிகை மிருணாள் தாகூர் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை ஹனு ராகவபுரி இயக்குகிறார்.

இதற்கிடையே நடிகர் மம்மூட்டி தனது குடும்பத்துடன் இங்கிலாந்துக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அவருடன் அவர் மனைவி சுல்ஃபத், மகன் துல்கர் சல்மான், மருமகள் அமல், பேத்தி மரியம் ஆகியோரும் சென்றுள்ளனர்.

லண்டன் விமான நிலையத்தில் இரண்டு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களும் நிற்கும் புகைப்படங்களை ரசிகர்கள் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in