இன்ஸ்டாகிராம் சாதனையை மாலத்தீவில் கொண்டாடிய மேகா ஆகாஷ்

இன்ஸ்டாகிராம் சாதனையை மாலத்தீவில் கொண்டாடிய மேகா ஆகாஷ்

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமாரங்’ போன்ற திரைப்படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக இருந்துவருகிறார். தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளிலும் கணிசமான ரசிகர்களைப் பெற்றுள்ள மேகா ஆகாஷ் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்கி வருபவர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் மேகா ஆகாஷ், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் 3 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இந்தச் சாதனையைக் கொண்டாடும் விதமாக மாலத்தீவில் உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் மணலில் ஹார்டின் வடிவ ரங்கோலி கோலம் போல் உருவாக்கி, அதில் இன்ஸ்டாகிராம் லோகோவின் கீழ் மூன்று மில்லியன் பாலோயர்கள் என்று கோலமிட்டு தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.