வரலாற்றில் முதல் முறையாக... மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் அரேபிய அழகி!

ரூமி அல்கஹ்தானி
ரூமி அல்கஹ்தானி

வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த மாடல் அழகி ரூமி அல்கஹ்தானி மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இந்தத் தகவலை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து பெருமை அடைந்துள்ளார்.

அரேபிய நாட்டைச் சேர்ந்தப் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். அதிலும் அவர்கள் அழகிப் போட்டியில் பங்கேற்பது என்பது எல்லாம் கனவிலும் சாத்தியப்படாத ஒன்றாக இருந்தது. அதை உடைத்து பலரும் சாத்தியப்படுத்தி வருகிறார்கள். அதில் இன்னும் ஒருபடி மேலே சென்றிருக்கிறார் ரூமி அல்கஹ்தானி. சவுதி அரேபியாவைச் சேர்ந்த மாடல் அழகியான இவர் இந்த ஆண்டு மெக்சிகோவில் நடைபெற இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கிறார். இந்தப் பெருமைமிகு தருணத்தைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

27 வயதாகும் ரூமி இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துவிட்டு கூறியிருப்பதாவது, “மிஸ் யுனிவர்ஸ் 2024ல் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன். சவுதி அரேபியாவில் இருந்து மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் பங்கேற்கும் முதல் பெண் என்பதில் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

இது வரலாற்றுத் தருணம் எனச் சொல்லி ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ரூமி இதற்கு முன்பு, மிஸ் ஆசியா, மிஸ் அரப் பீஸ், மிஸ் யூரோப் உள்ளிட்டப் பல அழகிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in