இன்ஸ்டாவில் அறிமுகமானார் மீரா ஜாஸ்மின்

நடிகை மீரா ஜாஸ்மின்
நடிகை மீரா ஜாஸ்மின்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் நடிகை மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாகிராமிலும் அறிமுகமாகி இருக்கிறார்.

கடந்த 2002-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். தொடர்ந்து, பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து, சண்டகோழி உட்பட பல படங்களில் நடித்தார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நடித்து வந்த அவர், கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின்னர் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். 7 வருடங்களுக்கு பின் மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கும் ’மகள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் நேற்று அறிமுகமாகியுள்ளார். முதல் பதிவில், ’மகள்’படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், நம் அனைவரையும் நெருக்கமாகக் கொண்டு வரும் இன்ஸ்டாவில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார். இன்ஸ்டாவில் இணைந்த ஒரு மணி நேரத்திலேயே ஒரு லட்சம் பாலோயர்கள் அவரை பின் தொடர்ந்துள்ளனர். நடிகர், நடிகைகள் உட்பட பலர் அவரை இன்ஸ்டாவுக்கு வரவேற்றுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in