உடல் எடை குறைத்து ‘ஃபிட்’-ஆன மீரா ஜாஸ்மின்

உடல் எடை குறைத்து ‘ஃபிட்’-ஆன மீரா ஜாஸ்மின்

லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘சண்டக்கோழி’, ‘ஆயுத எழுத்து’, போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி திரைத் துறையில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை மணமுடித்த மீரா, அதன்பிறகு தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் உடல் எடை கூடியிருந்தார் மீரா ஜாஸ்மின். தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ள மீரா ஜாஸ்மினின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மலையாளத்தில் தற்போது சத்யன் அந்திக்காடு இயக்கும் அந்தப் படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். கடந்த வாரம் அவருக்குத் துபாய் அரசாங்கம் கோல்டன் விசா வழங்கி சிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in