மனதைக் கவரும் டையூ - டாமனில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’!

மனதைக் கவரும் டையூ - டாமனில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’!

இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 'ரத்தம்' படத்தின் படப்பிடிப்பு டையூ - டாமனில் முழுமையாக நிறைவு பெற்றது. இப்படத்தைத் தயாரித்திருக்கும் விஜய் இன்ஃபினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக, விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் மில்டன் இயக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம், டையூ-டாமனின் அழகுமிகு கவர்ச்சியான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மாசில்லாத நீலக்கடல் மற்றும் சூரிய ஒளி பரவிய வெள்ளை மணல்வெளிகளைக் கொண்டது டையூ-டாமன். வித்தியாசமான இடங்களுக்காகவே அங்கு படப்பிடிப்பை நடத்தும் கனவை பல இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது டையூ-டாமன். பெரும்பாலான காட்சிகள் டையூ-டாமனில் படமாக்கப்படும் முதல் தமிழ்ப் படம் இது.

இப்படத்தை கமல் போரா, லலிதா தனஞ்சயன், பிரதீப் பி, பங்கஜ் போஹ்ரா மற்றும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ் சார்பில் எஸ். விக்ரம் குமார் இணைந்து தயாரிக்கின்றனர். மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சக்தி வாய்ந்த ஒரு பாத்திரத்திலும் தோன்றுகின்றனர். சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, 'தலைவாசல்' விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி மற்றும் இயக்குனர் ரமணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் ஒரு சிறப்புக் கதாபாத்திரத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பார் எனத் தெரிகிறது. விஜயகாந்த் தொடர்பான காட்சிகளை சென்னையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது, விரைவில் இந்த படப்பிடிப்பு குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும்.

அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் நம்பிக்கையளிக்கும் நடிகராக விஜய் ஆண்டனி வளர்ந்துவரும் நிலையில், 'மழை பிடிக்காத மனிதன்' படம் வர்த்தக வட்டாரங்களில் பெருமளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.