இயக்குநர் அஸ்வின் சரவணன் திருமணம்

இயக்குநர் அஸ்வின் சரவணன் திருமணம்

’மாயா’ இயக்குநர் அஸ்வின் சரவணன் தனது உதவியாளரை திருமணம் செய்துகொண்டார்.

நயன் தாரா, ஆரி உட்பட பலர் நடித்து வரவேற்பைப் பெற்ற ’மாயா’ படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன். அடுத்து எஸ்.ஜே.சூர்யா நடித்த ’இறவாக்காலம்’, டாப்ஸி நடித்த ’கேம் ஓவர்’ஆகிய படங்களை இயக்கினார். இப்போது நயன்தாரா, சத்யராஜ், அனுபம்கெர் நடிக்கும் ’கனெக்ட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அஸ்வின் சரவணன்
அஸ்வின் சரவணன்

அஸ்வின் சரவணனும் ’கேம் ஓவர்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய காவ்யா ராம்குமாரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இவர்கள் திருமணம் புதுச்சேரியில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in