ஐம்பது கோடி வசூலை கடந்த 'மாவீரன்’!

ஐம்பது கோடி வசூலை கடந்த 'மாவீரன்’!
ஐம்பது கோடி வசூலை கடந்த 'மாவீரன்’!

மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ’மாவீரன்’. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்போது படத்தின் வசூல் விவரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில், ‘மாவீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஐம்பது கோடி ரூபாய்க்கும் அதிக வசூலைப் பெற்றிருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. பேண்டசி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு குரல் கொடுத்துள்ளார். இதற்காக அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. இயக்குநர் மடோனா அஸ்வினுடனான நட்பிற்காகவே இதை விஜய்சேதுபதி செய்திருக்கிறார் எனவும் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

‘மாவீரன்’ படத்தை முடித்து விட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்திற்காக காஷ்மீர் சென்றுள்ளார். மேலும், அவரது ‘அயலான்’ திரைப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in