மாஸ் காட்டும் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்': வைரலாகும் க்ளிம்ப்ஸ்

மாஸ் காட்டும் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்': வைரலாகும் க்ளிம்ப்ஸ்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 'படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. தற்போது ரஜினி ரசிகர்களால் இந்த மேக்கிங் வீடியோ வைரலாக்கப்பட்டு வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'ஜெயிலர்'. நெல்சன் இயக்கத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிப்பதை, சன் பிக்சர்ஸ் நேற்று உறுதிப்படுத்தி அவரது புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.ரஜினியின் அசத்தல் ஸ்டைலில் உருவாகியுள்ள இந்த மேக்கிங் வீடியோவை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in