மீண்டும் மருதநாயகம்; கமல் நடிக்க மாட்டார்: ஹீரோவாகப் போகும் இவர்களில் ஒருவர் யார் தெரியுமா?

மீண்டும் மருதநாயகம்; கமல் நடிக்க மாட்டார்: ஹீரோவாகப் போகும் இவர்களில் ஒருவர் யார் தெரியுமா?

மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க நடிகர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். ஆனால், படத்தில் நடிக்க இரண்டு முக்கிய ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

மருதநாயகம், இந்த படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இங்கிலாந்து ராணி மறைந்த எலிசபெத்தை வைத்து இந்த படத்தைத் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். அதன் பின்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 35 சதவீதம் முடிக்கப்பட்ட நிலையில், சில பிரச்சினைகள் காரணமாக அப்படியே நின்றுபோனது. தற்போது கமல் நடித்த விக்ரம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூலில் பல சாதனைகளை படைத்து வெற்றியில் இருக்கும் கமல், மருதநாயகம் படத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் மருதநாயகம் எப்போது படமாக்கப்பட்டு திரைக்கு வரும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அண்மையில் பேட்டி அளித்த கமல்ஹாசன், விரைவில் மருதநாயகம் தொடங்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், அதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த படத்தில் கமல் நடிக்கமாட்டார் என தெரிகிறது. படத்தை இயக்கும் பொறுப்பை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கமல், இப்படத்திற்கு சூர்யா அல்லது விக்ரமை கதாநாயகனாக நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in