அதிர வைக்கும் மார்க் ஆண்டனி... 4 நாட்களில் ரூ.50 கோடி வசூல்!

மார்க் ஆண்டனி
மார்க் ஆண்டனி

மார்க் ஆண்டனி திரைப்படம் நான்கு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரிது வர்மா, சுனில், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபிநாய உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த 15-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் 9 கோடி ரூபாய் வரை இப்படம் வசூல் செய்துள்ளது.

மார்க் ஆண்டனி
மார்க் ஆண்டனி

இந்நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியான 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in