மாரிசெல்வராஜின் புதிய படம் `வாழை': தூத்துக்குடியில் படப்பிடிப்பு தொடக்கம்

மாரிசெல்வராஜின் புதிய படம் `வாழை': தூத்துக்குடியில் படப்பிடிப்பு தொடக்கம்

இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய திரைப்படத்திற்கு ‘வாழை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் இன்று தொடங்கியது. படப்பிடிப்பை நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

`பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். தனுஷை வைத்து இவர் இயக்கிய `கர்ணன்' படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் `மாமன்னன்' என்னும் படத்தை எடுத்து முடித்திருக்கிறார் மாரி செல்வராஜ். இந்தத் திரைப்படம் 2023-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிட்ட நிலையில், மாரி செல்வராஜ் தன் சொந்தத் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு `வாழை' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தில் இன்று தொடங்கியது. உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார். `வாழை' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, இவர்களுகளுடன் நான்கு சிறுவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 1994-ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in