நடிகர் தனுஷ் படத்திற்கு முன்பு துருவ் விக்ரமை இயக்கும் மாரிசெல்வராஜ்!

நடிகர் தனுசுடன் மாரிசெல்வராஜ்.
நடிகர் தனுசுடன் மாரிசெல்வராஜ்.நடிகர் தனுஷ் படத்திற்கு முன்பு துருவ் விக்ரமை இயக்கும் மாரிசெல்வராஜ்!

தனுஷ் படத்திற்கு முன்பு இயக்குநர் மாரிசெல்வராஜ் துருவ் படத்தை இயக்க இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்றத் திரைப்படம் ‘கர்ணன்’. படம் வெளியான சமயத்திலேயே மாரிசெல்வராஜூடன் மீண்டும் இணைவேன் என்பதை நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார். தற்போது படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி தனது தயாரிப்பில் மீண்டும் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதை தனுஷ் அதிகாரப்பூர்வமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருக்கிறார்.

இயக்குநர் மாரிசெல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார்.

அதேசமயம், அவரது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ படத்திற்கான டப்பிங் பணிகளும் தொடங்கி இருக்கிறது. அதனால், தனுஷூடன் அறிவித்துள்ள இந்தப் படத்திற்கான ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகளுக்கு நேரம் தேவைப்படும் எனவும் அதற்குள் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தை முடித்துவிட்டு தனது இயக்கத்தில் அறிவித்துள்ள ‘டி50’ படத்திற்கு சென்று விடுவார். இதற்குள் மாரிசெல்வராஜ் ஏற்கெனவே துருவ் விக்ரமுடன் அறிவித்துள்ள படத்தை முடித்துவிட்டு தனுஷூடன் இணைவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in