பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல சின்னத்திரை நடிகர் திடீர் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக பிரபல டி.வி நடிகர் திடீரென மரணம் அடைந்தது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல மராத்தி சின்னத்திரை நடிகர் அரவிந்த் தாணு (47). 'லகே மஜி லட்கி', 'சுக் மானே நக்கி கே அஸ்தா',' கிரைம் பேட்ரோல்' உட்பட பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். ’ஏக் ஹோதா வால்யா’ என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். மகாராஷ்டிராவில் பிரபலமான இவர், சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

அவரது ரத்த அழுத்தம் அதிகரித்தது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். ஆனால், அவர் உடல்நிலை திடீரென மோசமானது. பின்னர் அங்கு நேற்று உயிரிழந்தார். அவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அரவிந்த் தாணுவின் திடீர் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியிலும், மராத்தி சின்னத்திரை உலகிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மறைவுக்கு மராத்தி நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in