‘மாறன்’ பட வசனங்கள் என்னுடையது இல்லை: பாடலாசிரியர் விவேக்

பாடலாசிரியர் விவேக்
பாடலாசிரியர் விவேக்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘மாறன்’ பட வசனங்கள் என்னுடையது இல்லை" என்று பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாறன்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு பிரபல பாடலாசிரியர் விவேக், திரைக்கதை, வசனம் எழுதியதாக கூறப்பட்டது. இதனை மறுத்துள்ள பாடலாசிரியர் விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், முதலில் ‘மாறன்’ படத்தில் வசனம் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், பின்னர் சில காரணங்களால் இந்த படத்திலிருந்து விலகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

கூடவே எனது இந்த முடிவை மதித்த படக்குழுவினருக்கு நன்றி என்றும், மாறன் படத்தை பார்த்தபோது அருமையாக இருப்பதை உணர்ந்தேன் என்றும், இந்தியாவில் மிகப்பெரிய படங்களுக்காக வசனம் எழுதி வருகிறேன் என்றும், இருப்பினும் மாறன் தான் எனக்கு தொடக்கப்புள்ளி என்று விவேக் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in