ஏகப்பட்ட விஷயங்கள் வெளியே வரும்: நயன்தாராவை மிரட்டும் நடிகை கஸ்தூரி?

ஏகப்பட்ட விஷயங்கள் வெளியே வரும்: நயன்தாராவை மிரட்டும் நடிகை கஸ்தூரி?

இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியாக முடியாதவர்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வரும் நாட்களில் ஏகப்பட்ட விஷயங்கள் வெளியே வரும் என கஸ்தூரி ட்விட் செய்துள்ளது நடிகை நயன்தாராவிற்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கையென நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இவரும் ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், அக்டோபர் 9-ம் தேதியான (நேற்று) இரு ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா அம்மா ஆகியுள்ளார் என்று அவரது கணவர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நயன்தாரா கர்ப்பமாகாமல் எப்படி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக கொண்டார் என்று பிரபலங்களும், ரசிகர்களும் கேள்வி எழுப்பினர். வாடகைத்தாய் மூலம் தான் நயன்தாரா குழந்தை பெற்றிருக்க வேண்டும் என்று முடிவுக்கும் வந்துள்ளனர்.

நடிகர் கவின், விஜே டிடி நீலகண்டன் உள்ளிட்டோர் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஆனால், நடிகை கஸ்தூரி செய்துள்ள ட்விட் தற்போது பெரும் பிரச்சினையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அவரது பக்கத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியாக முடியாதவர்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வரும் நாட்களில் ஏகப்பட்ட விஷயங்கள் வெளியே வரும் என்றும் பதிவிட்டுள்ளார்.

நடிகை நயன்தாராவை குறிவைத்து கஸ்தூரி செய்துள்ள ட்விட்டிற்கு நெட்டிசன்கள் பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். வாடகைத்தாய் பற்றி கஸ்தூரி தீவிரமாக ஆராய்ச்சி செய்றாங்க என நடிகர் சிவாஜிகணேசன் படத்தோட வீடியோ டெம்பிளேட்டை போட்டு கஸ்தூரியை அவர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அத்துடன் உங்களுக்கு தேவையில்லாத வேலை இது என்றும், நயன்தாரா வாடகைத்தாய் மூலமாகத்தான் குழந்தை பெற்றார் என்று சொல்றீங்களா என கஸ்தூரக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். இதில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வாடகைத்தாய் மூலம் தான் குழந்தை பெற்றார் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

அதற்கும் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.. நான் ஒரு வழக்கறிஞர் அது எப்படி சட்டப்படி சரியா இருக்கா, இல்லையான்னு தெரிஞ்சிக்க விரும்புறது தப்பா என கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை கஸ்தூரி தொடங்கியுள்ள இந்த ட்விட்டர் தாக்குதலுக்கு நயனின் ரசிகர்களும் பதில் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in