‘கடமான்பாறை'க்குக் கிடைக்கவில்லை திரை: கவலையில் மன்சூர் அலிகான்!

‘கடமான்பாறை'க்குக் கிடைக்கவில்லை திரை: கவலையில் மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் ‘கடமான்பாறை’ எனும் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். அப்படத்தை வெளியிட திரையரங்கம் கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கிறார்.

நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு முகங்கள் கொண்ட மன்சூர் அலிகான், தன் மகன் துக்லக் நாயகனாக நடிக்கும் ‘கடமான்பாறை’ எனும் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை (ஆக.26) படத்தைத் தமிழ்நாடு முழுவதும் வெளியிட முன்கூட்டியே தீர்மானித்து, 10 லட்ச ரூபாய் செலவில் வெளியீட்டுத் தேதியுடன் போஸ்டர் அடித்து, தயார் நிலையில் இருந்தார்.

ஆனால் எதிர்பார்த்தபடி போதிய திரையரங்குகள் கிடைக்காததால் ’கடமான்பாறை’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து, இந்தப் படத்தை வெளியிட இவ்வளவு நாள் பொறுத்தும் பயன் இல்லையே என விரக்தியில் இருக்கிறார் மன்சூர் அலிகான்.

இன்று இரவுக்குள் கேட்ட திரையரங்கங்கள் கிடைக்காவிட்டால் ஓடிடி-யில் வெளியிட அவர் முடிவுசெய்துவிட்டதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in