தனக்கான தனித்துவமான பாணியை வகுத்துக்கொண்டவர் மனோபாலா: சீமான் புகழாரம்

மனோபாலா
மனோபாலாதனக்கான தனித்துவமான பாணியை வகுத்துக்கொண்டவர் மனோபாலா: சீமான் புகழாரம்

எங்கள் அப்பா பாரதிராஜாவின் பாசறையில் இருந்து வந்தாலும் தனக்கென தனித்துவமான பாணியை வகுத்துக்கொண்ட வெற்றிகரமான இயக்குநர், நடிகர் மனோபாலாவின் மறைவு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நடிகர் மனோபாலாவின் மறைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சீமான்," காலத்தால் அழியாத கலைப்படைப்புகளைத் தந்த திரைப்பட இயக்குநரும், தனது நகைச்சுவை ததும்பும் நடிப்பால் மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகருமான என் பேரன்புக்குரிய அண்ணன் மனோபாலா மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

எங்கள் அப்பா பாரதிராஜாவின் பாசறையிலிருந்து வந்தாலும் தனக்கென தனித்துவமான பாணியை வகுத்துக்கொண்ட வெற்றிகரமான இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்த அவருடைய இழப்பென்பது தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அண்ணன் மனோபாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in