`இந்த அப்டேட்லாம் எங்கயிருந்து கிடைக்குது?’: `புஷ்பா 2’ விவகாரத்தில் விளாசும் வில்லன்

`இந்த அப்டேட்லாம் எங்கயிருந்து கிடைக்குது?’:  `புஷ்பா 2’ விவகாரத்தில் விளாசும் வில்லன்

புஷ்பா 2 படத்தில் நடிப்பதாக வெளியான செய்திகள் குறித்து பிரபல நடிகர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில், விஷாலின் சமர், சூர்யாவின் அஞ்சான் படங்களில் வில்லனாக நடித்தவர், இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய். ’த ஃபேமிலிமேன்’ தொடரில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்து புகழ்பெற்றவர். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் இவர், போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றிய செய்திகள் வேகமாக பரவின.

மனோஜ் பாஜ்பாய்
மனோஜ் பாஜ்பாய்

இந்நிலையில் இதை மறுத்துள்ள மனோஜ் பாஜ்பாய், இது தொடர்பான செய்தி வெளியான சமூக வலைதளப் பக்கத்தை டேக் செய்து, ‘இதுபோன்ற செய்திகள் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன?’ என்று கேட்டுள்ளார். இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் மறுத்துள்ளார்.

இதற்கு முன் அவர் அளித்த பேட்டியில், ``தென்னிந்திய படங்களில் நான் நடித்திருக்கிறேன். நல்ல கதைகளை மட்டுமே பார்க்கிறேன். மற்றபடி அந்தப் படங்களில் பட்ஜெட் 1000 கோடியா, 500 கோடியா, 300 கோடியா என்று பார்ப்பதில்லை. அப்படி பார்த்து நடிப்பதை வெறுக்கிறேன். இப்போது எல்லோருமே பாக்ஸ் ஆபிஸ் பற்றி பேசுகிறார்கள். நான் எப்போதும் பாக்ஸ் ஆபிஸ் போக்குக்கு எதிராக போராடி வருகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

’புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், மைம் கோபி உட்பட பலர் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கிய இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in