’மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியானது அறிவிப்பு!

மஞ்சுமெல் பாய்ஸ்
மஞ்சுமெல் பாய்ஸ்

மலையாளத்தில் வெளியாகி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்புப் பெற்ற ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான ’மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் கேரளம், தமிழகம் என வசூலில் சக்கைபோடு போட்டது. உலகளவில் ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய இப்படம், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு ரூ.15 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்.

இந்த நிலையில், இப்படம் வருகிற மே 5 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘மஞ்சுமெல் பாய்’
‘மஞ்சுமெல் பாய்’

கொடைக்கானல் குணா குகையில் விழுந்தவரை, நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ’மஞ்சுமெல் பாய்ஸ்’ மலையாள திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. இந்தப் படம் கேரளாவில் விட தமிழகத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஏனெனில், கதை நடக்கும் தமிழக பகுதி, கமல் நடிப்பில் வெளியான 'குணா' படத்தின் பாதிப்பு, 'கண்மணி அன்போடு காதலன்' எனும் பாடல் பயன்படுத்திய விதம் உள்ளிட்ட விஷயங்கள், தமிழ் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள், படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினர். இதனால், சுமார் ரூ.20 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம், ரூ.200 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி எஸ்.பொடுவால், லால் ஜூனியர், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன், காலித் ரஹ்மான், சந்து சலீம்குமார், ஷெபின் பென்சன், மற்றும் விஷ்ணு ரெகு உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in