சூப்பர் அப்டேட்: அஜித் ஜோடியானார் `அசுரன்’ நாயகி

சூப்பர் அப்டேட்: அஜித் ஜோடியானார் `அசுரன்’ நாயகி

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தில் ’அசுரன்’ நாயகி ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

’வலிமை’ படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித்குமார். வினோத், அஜித் இணையும் மூன்றாவது படம் இது. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. AK 61 என்று தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக, அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது.

ANANDKUMAR

இந்தப் படத்தில் வில்லனாகவும் ஹீரோவாகவும் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. படத்துக்கான அஜித்தின் புகைப் படத்தைத் தயாரிப்பாளார் போனி கபூர் வெளியிட்டிருந்தார். அதில் வெள்ளை தாடியுடனும் காதில் கடுக்கனுடனும் ஸ்டைலாக இருந்தார் அஜித். இந்நிலையில், உடலை கணிசமாகக் குறைத்து ஸ்லிம்மான அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

அஜித் ஜோடியாக தபு, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘இந்தப் படத்துக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை தேவைப்பட்டார். அதனால் மஞ்சுவாரியரை ஒப்பந்தம் செய்துள்ளோம். அஜித், மஞ்சுவாரியர் ஜோடி பிரெஷ்சாக இருக்கும்’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மலையாள நடிகையான மஞ்சு வாரியர், தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ’அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in