அஜித் படத்தில் நடிப்பது பற்றி என்ன சொல்கிறார் மஞ்சு வாரியர்?

அஜித் படத்தில் நடிப்பது பற்றி என்ன சொல்கிறார் மஞ்சு வாரியர்?
ANANDKUMAR

அஜித்குமார் நடிக்கும் படத்தில் நடிப்பது பற்றி நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

’வலிமை’ படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித்குமார். போனி கபூரின் பேவியூ புராஜக்ட்ஸ் எல்.எல்.பி, ஜீ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. AK 61 என்று தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக, அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதில் வில்லனாகவும் ஹீரோவாகவும் அஜித் நடிப்பதாகக் கூறப்படுகிறது. படத்துக்கான அஜித்தின் புகைப்படத்தைத் தயாரிப்பாளார் போனி கபூர் வெளியிட்டிருந்தார். அதில் வெள்ளை தாடியுடனும் காதில் கடுக்கனுடனும் ஸ்டைலாக இருந்தார் அஜித். இந்நிலையில், உடலை கணிசமாகக் குறைத்து ஸ்லிம்மான அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்தப் படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஜான் கொக்கென், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகி இருக்கிறார். மலையாள நடிகையான இவர், தமிழில் ’அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் அஜித் படத்தில் நடிப்பதை மஞ்சு வாரியர் உறுதிப்படுத்தியுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், அஜித்துடன் நடிப்பது பற்றி கேட்டபோது, ’உண்மைதான். இது நம்பிக்கைக்குரிய புராஜக்ட்’ என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in