சொகுசு கார் வாங்கிய லேடி சூப்பர் ஸ்டார்

புதிய எலக்ட்ரிக் மினி கூப்பர் காருடன் மஞ்சு வாரியர்
புதிய எலக்ட்ரிக் மினி கூப்பர் காருடன் மஞ்சு வாரியர்

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான மஞ்சு வாரியர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை விவாகரத்து செய்த பின் மலையாள சினிமாவில் ரீ என்ட்ரியான மஞ்சு வாரியர், இப்போது அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். இப்போது, மேரி ஆவாஜ் சுனோ, படவேட்டு, வெள்ளரிக்காபட்டணம், கப்பா, ஆயிஷா உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

மினி கூப்பர் காருடன் மஞ்சு வாரியர்
மினி கூப்பர் காருடன் மஞ்சு வாரியர்

'அம்ரிகி பண்டிட்' என்ற படம் மூலம் இந்திக்கும் செல்ல இருக்கிறார்.

வெற்றிமாறனின் 'அசுரன்' மூலம் தமிழ் சினிமாவுக்கும் வந்த மஞ்சு வாரியர், அதற்கு பின் தமிழில் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் உள்ள மினி கூப்பர் எஸ்இ வகை எலக்டரிக் காரை, அவர் வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.47.20 லட்சம் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரேஞ்ச் ரோவர் கார் வைத்திருக்கும் மஞ்சு வாரியர், ஷூட்டிங் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு அதில் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இனி, மினி கூப்பரில் அவரைப் பார்க்கலாம் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in