’பொன்னி நதி பார்க்கணுமே...’: பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியீடு

’பொன்னி நதி பார்க்கணுமே...’: பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியீடு

’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது. இந்தப் பாடல் வைரலாகி வருகிறது.

கல்கியின் புகழ்பெற்ற ’பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாக இருக்கிறது. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி ’பொன்னி நதி பார்க்கணுமே’ என்ற அந்தப் பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.ரஹைனா, பம்பா பாக்யா ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in