சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் ‘மண்டேலா’ பட இயக்குநர்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் ‘மண்டேலா’ பட இயக்குநர்

‘டாக்டர்’ திரைப்படத்தை அடுத்து தற்போது ‘டான்’ திரைப்படத்தில் சிபி சக்ரவர்த்தி என்ற அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கில் ‘ஜதிரத்னாலு’ திரைப்படத்தை இயக்கிய அனுதீப் இயக்கும் திரைப்படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாகிறது. இதை முடித்தபிறகு, யோகி பாபு நடிப்பில் வெளியாகிப் பல விருதுகளைக் குவித்த ‘மண்டேலா’ திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படமும் ‘மண்டேலா’ திரைப்படம் போன்றே சமூகப் பிரச்சினையைப் பற்றிப் பேசும் ஒரு மாறுபட்ட கதையில் உருவாகவுள்ளதாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in