விதி மீறி காரில் டின்ட் கிளாஸ்: பிரபல நடிகருக்கு அபராதம்

விதி மீறி காரில் டின்ட் கிளாஸ்: பிரபல நடிகருக்கு அபராதம்

விதி மீறி காரில் டின்ட் கிளாஸ் பொருத்திய பிரபல நடிகருக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.

கார்களில், கருப்பு பிலிம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கண்ணாடிகளை (டின்ட் கிளாஸ்) பொருத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறியும் சில பிரபலங்கள் அப்படி கருப்பு நிற டின்ட்களை கார்களில் பொருத்தியுள்ளனர். இதைத் தடுப்பதற்கு அவ்வப்போது போக்குவரத்து போலீஸார் சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கண்ணாடிகளில், கருப்பு பிலிம் ஸ்டிக்கர் ஓட்டப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.

மனோஜ் மஞ்சு
மனோஜ் மஞ்சு

சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர், ஜூனியர் என்.டி.ஆர் காரில் விதிகளை மீறி கருப்பு நிற டின்ட் ஒட்டியதாகக் கூறி அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு தெலுங்கு நடிகரான மனோஜ் மன்சுவுக்கும் ஹதராபாத் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.

ஹதராபாத்தின் டோலிசோவ்கி (Tolichowki) பகுதியில் அதிக டின்ட் ஒட்டப்பட்ட காரை மறித்தபோது அதில் நடிகர் மனோஜ் மன்சு இருந்தார். அந்த காரில் இருந்த டின்ட்களை அகற்றிய போலீஸார், அவருக்கு ரூ.700 அபராதம் விதித்தனர்.

Related Stories

No stories found.