நடிகை கேத்ரினாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

நடிகை கேத்ரினாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

பிரபல நட்சத்திர தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த, வாய்பில் லாத நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவர், கேத்ரினா கைஃப். 2003-ம் ஆண்டு வெளியான ‘பூம்’ படம் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவரும் இந்தி நடிகர் விக்கி கவுசலும் சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.

கேத்ரினா கைஃப், விக்கி கவுசல்
கேத்ரினா கைஃப், விக்கி கவுசல்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகை கேத்ரினா கைஃப் இப்போது, ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கேத்ரினாவும் விக்கி கவுசலும் மாலத்தீவு சென்று திரும்பியுள்ள னர்.

இந்நிலையில், தனக்கும் தனது மனைவிக்கும் சமூக வலைத ளத்தில் மர்மநபர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தன் மனைவியை, பின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் நடிகர் விக்கி கவுசல், மும்பை சாந்தாகுரூஸ் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வந்தனர்.

கேத்ரினாவுடன் மன்வீர் சிங் - மார்பிங் புகைப்படம்
கேத்ரினாவுடன் மன்வீர் சிங் - மார்பிங் புகைப்படம்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த மன்விந்தர் சிங் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தி திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்துள்ள மன்விந்தர், நடிகை கேத்ரினாவின் தீவிர ரசிகர்.

அவருடைய சமூக வலைதளப்பக்கத்தில், கேத்ரினாவுடன் இருப்பது போல ஏராளமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் மார்பிங் செய்து நிறைத்துள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in