மோகன்லாலின் ஆஸ்தான இயக்குநர் படத்தில் மம்மூட்டி: பெயர் என்ன தெரியுமா?

மோகன்லாலின் ஆஸ்தான இயக்குநர் படத்தில் மம்மூட்டி: பெயர் என்ன தெரியுமா?

மலையாளத் திரையுலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பி.உன்னிகிருஷ்ணன். இவர் இயக்கிய 'ஆராட்டு’, ‘வில்லன்’ போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றவை. நடிகர் விஷால், நடிகைகள் ஹன்சிகா, ராஷி கண்ணா ஆகியோரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. மலையாளத் திரையுலக இயக்குநர் சங்கத்தில் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். கடந்த பத்து வருடங்களில் எடுத்த பெரும்பாலான படங்களில் மோகன்லாலே நாயகனாக நடித்தார்.

இந்த நிலையில் தற்போது மம்மூட்டியை வைத்து தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் பி.உன்னிகிருஷ்ணன். ஏற்கெனவே மம்முட்டியை வைத்து ‘பிரமாணி’ என்கிற படத்தை இயக்கியுள்ள உன்னிகிருஷ்ணன், கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மம்மூட்டி படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் முதல் தேதியை முன்னிட்டு இந்தப் படத்திற்கு ‘கிறிஸ்டோபர்’ என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியாகி உள்ளது. 'பயோகிராபி ஆஃப் ஏ விஜிலன்ட் காப்' என்கிற டேக்லைன் மூலம் இந்தப் படத்தில் மம்மூட்டி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in