ஓடிடியில் வெளியாகும் `மாமன்னன்’- எப்போது தெரியுமா?

'மாமன்னன்' திரைப்படம்
'மாமன்னன்' திரைப்படம்

'மாமன்னன்’ திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் வடிவேலு, உதயநிதி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ’மாமன்னன்’. திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இந்தப் படத்தில் நடிகர் வடிவேலுவின் நடிப்பை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இவரது நடிப்பிற்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வசூல் ரீதியாகவும் இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது எனவும், உதயநிதி இதுவரை நடித்த படங்களிலேயே இதுதான் அதிகம் வசூல் செய்த படம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ‘மாமன்னன்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் இந்த மாதம் 27-ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. நடிப்பை விட்டு விலகுவதாக சொல்லி இருக்கும் உதயநிதி, வரும் காலத்தில் ஒருவேளை நடிப்பதாக இருந்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில்தான் நடிப்பேன் என சொல்லி இருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in