பான் இந்தியா ஹீரோவுக்கு ஜோடியாகிறார் மாளவிகா

நடிகை மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன், பான் இந்தியா ஹீரோவான பிரபாஸ் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில், ரஜினியின் ’பேட்ட’, விஜய்யின் ’மாஸ்டர்’ படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். இப்போது தனுஷின் ’மாறன்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தியில் ’பியாண்ட் த கிளவுட்ஸ்’ என்ற படத்தில் நடித்திருக்கும் மாளவிகா, இப்போது ‘யுத்ரா’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, பிரபல பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபாஸ், சலார் படத்தில் நடித்து வருகிறார்.

இதை அடுத்து, அவர் நடிக்கும் படத்தை மாருதி இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை ’ஆர் ஆர் ஆர்’ படத்தைத் தயாரித்துள்ள டிவிவி தனய்யா தயாரிக்கிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in