`பாலிவுட் நடிகைகள் பொய் சொல்கிறார்கள்’: உண்மையை உடைத்த மல்லிகா ஷெராவத்

`பாலிவுட் நடிகைகள் பொய் சொல்கிறார்கள்’: உண்மையை உடைத்த மல்லிகா ஷெராவத்

``பாலிவுட் நடிகைகள் பொய் சொல்கிறார்கள்'' என்று நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்தார்.

பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத். இவர் தமிழில் கமல்ஹாசனின் `தசாவதாரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். சிம்புவின் ’ஒஸ்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள மல்லிகா ஷெராவத் இப்போது ’RK/RKay’ என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். ரஜத் கபூர் இயக்கி நடித்துள்ள இந்தப் படத்தில் ரன்வீர் ஷோரி, குப்ரா சேட், மனு ரிஷி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழா உட்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மல்லிகா ஷெராவத் கூறியதாவது:

கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ’தி மித்’ படத்தின் மூலம் சர்வதேச நடிகை ஆனேன். அதில் ஜாக்கிசானுடன் நடித்தது பெருமையான விஷயம். இந்தப் படத்தில் எனக்கு ஆடிஷன் மூலமே வாய்ப்புக் கிடைத்தது. பாலிவுட்டில் பல நடிகைகள் ஆடிஷனுக்கு செல்வதில்லை என்று சொல்வதெல்லாம் பொய்.

பல பாலிவுட் நடிகைகள், அந்த படத்துக்கான ஆடிஷனின் பங்கேற்றார்கள். அந்தப் பதிவுகளை ஜாக்கிசான் என்னிடம் காட்டினார். நடிப்புத் திறமையால்தான் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. என் உடலமைப்பை அவர்கள் விரும்பினார்கள். தினமும் யோகா செய்வதால் கிடைத்த உடல்வாகு அது. ஜாக்கிசான் சிறப்பான மனிதர். ஹாலிவுட்டில் எனக்கு கதவுகளைத் திறந்தவர். உண்மையிலேயே என்னை அவர் ஆதரித்தார்.

இவ்வாறு மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in