மறுபிறவி எடுத்த நாளும், மாலத்தீவில் ரஜினிகாந்தும்!

ரஜினி காந்த் மற்றும் அவரை வரவேற்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள்
ரஜினி காந்த் மற்றும் அவரை வரவேற்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள்

இடையறாத படப்பிடிப்பு பணிகளுக்கு இடையே சிறு இடைவெளி கிடைக்கவே, சட்டென மாலத்தீவுக்கு கிளம்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். ஓய்வுக்கு அப்பால் அவரது மாலத்தீவு பயணத்தின் பின்னணி வேறு என்னவாக இருக்கும்?

டிசம்பர் 12, ரஜினியின் பிறந்த நாளை அவரது ரசிகர்களால் மறக்க முடியாது. பிறந்த நாளுக்கு அப்பால் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் முக்கியமான நாளாக ஜூலை 13 விளங்குகிறது. அதுதான் ரஜினி காந்த் மறுபிறவி எடுத்த நாள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த சம்பவம் அரங்கேறியது. ’ராணா’ படப்பிடிப்பின் இடையே சுகவீனம் கண்ட ரஜினி காந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ரஜினி குறித்து பலவாறான வதந்திகள் வலம் வந்ததில், கடைசியாக ரசிகர்களின் நீண்ட பிரார்த்தனை பலித்தது. அப்படி அவர் நலமுடன் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய நாளே ஜூலை 13. அண்மை ஆண்டுகளாக தனது பிறந்த நாளை விட ஜூலை 13, ரஜினிக்கு மிகவும் முக்கியமாகிப் போயிருக்கிறது.

ரஜினி மறுபிறவி எடுத்து வந்த அந்த நாளில் பெரும்பாலும் அவர் ஓய்வில் இருப்பார். வெளியார் எவரையும் சந்திக்காது அவருக்கே உரிய ஆன்மிக சாதகத்தில் திளைத்திருப்பார். தனது நேரத்தை குடும்பத்தாரோடும் செலவழிப்பார். இந்த ஆண்டும் அப்படித்தான் ரஜினி காந்துக்கு ஜூலை 13 கழிந்தது.

மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படப்பிடிப்பில் இருந்து ஜூலை 12 அன்றுதான் ரஜினி விடுபட்டார். அடுத்த நாள் அவர் மறுபிறவி எடுத்த ஜூலை 13. என்ன நினைத்தாரோ, திடீரென மாலத்தீவுக்கு பறந்திருக்கிறார் ரஜினி.

அதிகம் அறியப்படாத ரஜினிகாந்தின் மாலத்தீவு பயணம், அவர் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவை பகிரங்கம் செய்ததில் வெளியுலகுக்கு தெரிய வந்திருக்கிறது. அண்மைக் காலமாக திரையுலகினரின் ஓய்வுத் தலமாக மாறிவரும் மாலத்தீவுக்கு ரஜினியும் சென்றிருப்பதில் வியப்பில்லை. அதிலும் மறுபிறவி எடுத்த நாளையொட்டிய அவரது பயணம் மேலும் அர்த்தம் பெறுகிறது.

வழக்கமான ஆன்மிக தலங்களுக்கான யாத்திரையாக அன்றி, இயற்கையழகும் ரம்யமும் கொஞ்சும் மாலத்தீவின் அழகில் திளைத்திருக்க சென்றிருக்கிறார் ரஜினி. அந்தப் பயணத்தின் போதான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பகிர்ந்த ரஜினிகாந்தின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in