வெவ்வேறு துறை பெண்களின் கதை: 5 நடிகைகளின் ’ஹர்’!

வெவ்வேறு துறை பெண்களின் கதை: 5 நடிகைகளின் ’ஹர்’!
பார்வதி

ஐந்து நடிகைகள் இணைந்து நடிக்கும் படம் ’ஹர்’ என்ற பெயரில் உருவாகிறது.

பஹத் பாசி, அன் அகஸ்டின் நடித்த ’ஃபிரைடே’. குஞ்சாக்கோ போபன் நடித்த ’லா பாயின்ட்’ ஆகிய மலையாளப் படங்களை இயக்கியவர் லிஜின் ஜோஸ். மேலும் சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் இயக்கியுள்ள இவர், இப்போது சேரா (chera) என்ற படத்தை இயக்கியுள்ளார். நிமிஷா சஞ்சயன், ரோஷன் மாத்யூ நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இதையடுத்து இவர் இயக்கும் படத்துக்கு ’ஹர்’ (Her) என்று தலைப்பு வைத்துள்ளார். இதில் முன்னாள் ஹீரோயின் ஊர்வசி, ’பூ’ பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா நம்பீசன், லிஜோமோல் ஜோஸ் ஆகிய 5 நடிகைகள் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். மற்றும் பிரதாப் போத்தன், குரு சோமசுந்தரம், ராஜேஷ் மாதவ் உட்பட பலர் நடிக்கின்றனர். அர்ச்சனா வாசுதேவ் இதன் ஸ்கிரிப்டை எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏடி ஸ்டூடியோ தயாரிக்கும் இந்தப் படம், வாழ்க்கையில் வெவ் வேறு துறைகளில் இருக்கும் ஐந்து பெண்களின் கதைதான் இந்தப் படம். இதன் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ரம்யா, ஊர்வசி, பார்வதி, லிஜோ மோல், ஐஸ்வர்யா ராஜேஷ்
ரம்யா, ஊர்வசி, பார்வதி, லிஜோ மோல், ஐஸ்வர்யா ராஜேஷ்

Related Stories

No stories found.