‘சாயாவனம்’ திரைப்படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல மலையாள இயக்குநர்!

‘சாயாவனம்’ திரைப்படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல மலையாள இயக்குநர்!

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அனில், 'சாயாவனம்' படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

மலையாளத்தில் 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் அனில். முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ள அவருடைய சமீபத்திய படம் 'மையா' இந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் அவர் ’சாயாவனம்’ என்ற படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில்,'கடைக்குட்டி சிங்கம்', 'தர்மதுரை', 'சுந்தர பாண்டியன்' படங்களில் நடித்த சௌந்தரராஜா நாயகனாக நடிக்கிறார். அவர் நாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன் ‘ஒரு கனவு போல’, ‘காமெடி மன்னன்’ கவுண்டமணி யுடன் ‘எனக்கு வேறு எங்கும் கிடையாது’ படங்களில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார்.

’சாயாவனம்’ சௌந்தரராஜா, தேவானந்தா
’சாயாவனம்’ சௌந்தரராஜா, தேவானந்தா

தேவானந்தா, அப்புக்குட்டி, ஜானகி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு போலி வர்கீஸ் இசையமைக்கிறார். தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் அனில் கூறும்போது, ’’இந்தப் படம், தேவானந்தா நடிக்கும் சீதை கதாபாத்திரத்தைச் சுற்றி நகரும் கதையை கொண்டது. படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டிருக்கிறது. கதையை புரிந்துகொண்டு சௌந்தரராஜா நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் இது என்று நம்புகிறேன். படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக, இயற்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள், காடுகளைப் போல அடர்த்தியானவை" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in