இன்று ரிலீஸாக இருந்த படத்தின் தயாரிப்பாளர் கைது: போலி ஆவணம் கொடுத்து மோசடி செய்தது அம்பலம்!

இன்று ரிலீஸாக இருந்த படத்தின் தயாரிப்பாளர் கைது: போலி ஆவணம் கொடுத்து மோசடி செய்தது அம்பலம்!
திரைப்படத் தயாரிப்பாளர் எம்.டி.மஹ்ஃபூஸ்

போலி ஆவணம் கொடுத்து ரூ.4 கோடி கடன் பெற்ற வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் எம்.டி.மஹ்ஃபூஸ். சில படங்களைத் தயாரித்துள்ள இவர், இப்போது ’சயன்ன வார்த்தகள்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இதில் பிரபல ஹீரோ சுரேஷ் கோபி மகன் கோகுல் சுரேஷ், நடிகர் சீனிவாசனின் மகன் தியான் சீனிவாசன், அஜு வர்கீஸ், சரண்யா சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர்.

அருண் சந்து இயக்கியுள்ள இந்தப் படம் கடந்த 2019-ம் வருடமே ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. கரோனா உட்பட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் இன்று (ஜூன் 24) வெளியாக இருந்தது.

இதற்கிடையே இதன் தயாரிப்பாளர் மஹ்ஃபூஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018- ம் வருடம் இவர், சவுத் இந்தியன் வங்கியில், ரூ.4,17,44,000 கடன் பெற்றுள்ளார். கடனைத் திருப்பிச் செலுத்தாததால், வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கடன் பெறுவதற்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இதுபற்றி வங்கி அதிகாரிகள் போலீஸில் புகார் அளித்தனர். காசர்கோடு போலீஸார், மஹ்ஃபூஸை கைது செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in