புற்று நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல இயக்குநர் காலமானார்

புற்று நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல இயக்குநர் காலமானார்

புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல மலையாள இயக்குநர் ஜி.எஸ்.பணிக்கர் காலமானார்.

பிரபல மலையாள இயக்குநர் ஜி.எஸ். பணிக்கர். 1978-ம் ஆண்டு வெளியான இகாகினி (Ekakini) என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார். இதில் ஷோபா, இந்திரபாலன், ரவிமேனன் உட்பட பலர் நடித்திருந்தனர். எம்.டி.வாசுதேவன் நாயரின் சிறுகதையில் இருந்து உருவான இந்தப் படம், மாநில விருது உட்பட பலவேறு விருதுகளைப் பெற்றது. இதையடுத்து வாசரஸய்யா, சகியன்டே மகன், பிராகிரிதி மனோகரி, பூத்தன்பாண்டி , பாண்டவபுரம் உட்பட ஏழு படங்களை இயக்கியுள்ளார். சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.

சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், 2018-ம் ஆண்டு, மிட் சம்மர் ட்ரீம்ஸ் என்ற படத்தை மீண்டும் இயக்க இருந்தார். அந்தப் படம் தொடங்காமலேயே நின்றுவிட்டது. திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியில் வசித்து வந்த அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in