“அந்தப் புகைப்படத்தை பரப்புவதா?” -நடிகை மாளவிகா புகார்

“அந்தப் புகைப்படத்தை பரப்புவதா?” -நடிகை மாளவிகா புகார்
நடிகை மாளவிகா மோகனன்

தனது புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து பரப்புவதாக நடிகை மாளவிகா மோகனன் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழில், ரஜினியின் ’பேட்ட’, விஜய்யின் ’மாஸ்டர்’ படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். இப்போது தனுஷின் ’மாறன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் கூட பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அது வைரலானது.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

இந்நிலையில் தனது புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், பகீர் புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதில், “என்னுடைய இந்தப் புகைப்படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன், யாரோ ஒருவர் ஆபாசமான முறையில் போட்டோஷாப் செய்து பதிவிட்டுள்ளார். அதை சிலர் இணையதளங்களில் பரப்பி வருகின்றனர். நீங்கள் போலியான அந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் புகார் தெரிவியுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மாளவிகாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in