இசை ஆல்பத்தில் நடித்துள்ள தனுஷ் பட ஹீரோயின்!

இசை ஆல்பத்தில் நடித்துள்ள தனுஷ் பட ஹீரோயின்!

நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார்.

பிரபல நடிகை மாளவிகா மோகனன், மலையாள ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள். ’பட்டம் போலே’ என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி இயக்கிய ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’, ரஜினிகாந்த்தின் ’பேட்ட’, விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் தனுஷின் ’மாறன்’ படங்களில் நடித்தார்.

அடுத்து 'யுத்ரா' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இவர் முதன்முறையாக வீடியோ ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார். பிரபல ராப் இசைக் கலைஞர் பாட்ஷாவின் இசையில், 'தவுபா' (TAUBA) என்ற பெயரில் இந்த ஆல்பம் உருவாகியுள்ளது.

இதில் மற்றொரு பிரபலமான பாடகர் பாயல் தேவ்வும் இணைந்துள்ளார். அப்னி துன் மற்றும் வார்னர் மியூசிக் இண்டியா இணைந்து இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளது. வீடியோ பற்றிய அறிவிப்பை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாளவிகா மோகனன் அது தொடர்பான சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். விரைவில் இந்த ஆல்பம் ரிலீஸ் ஆகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in