`முதல் அடையாளம்’: நடிகையாக அறிமுகமாகும் நட்சத்திர தம்பதி மகள்

`முதல் அடையாளம்’: நடிகையாக அறிமுகமாகும் நட்சத்திர தம்பதி மகள்
மாளவிகா ஜெயராம்

பிரபல நட்சத்திர தம்பதியின் மகள் நடிகையாக அறிமுகமாகிறார்.

பிரபல மலையாள நடிகர் ஜெயராம். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். கோகுலம், மனசு ரெண்டும் புதுசு, முறைமாமன், பஞ்சதந்திரம், தெனாலி, துப்பாக்கி, உத்தமவில்லன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்திருக்கிறார்.

இவர் மனைவி பார்வதி மலையாளப் படங்களில் நாயகியாக நடித்தவர். இவர்களுக்கு காளிதாஸ் ஜெயராம் என்ற மகன் மாளவிகா ஜெயராம் என்ற மகள் உள்ளனர். ஜெயராம் இப்போது படங்களில் நடித்து வருகிறார். மாளவிகாவும் படங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

சில விளம்பரப் படங்களில் நடித்துள்ள அவர், இப்போது அசோக் செல்வனுடன் இணைந்து `மாயம் செய்தாயோ பூவே' என்ற மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

பிரணவ் கிரிதரண் இசை அமைத்துள்ள இந்த வீடியோவை அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த மியூசிக் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள மாளவிகா, இந்த அழகான பொழுதுபோக்குத் துறையில் நான் முதல் அடையாளத்தைப் பதிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in