`துணிச்சல் மிகுந்த சாகசக்காரன்'- `பொன்னியின் செல்வன்’ படத்தின் வந்தியத்தேவன் லுக் வெளியீடு

`துணிச்சல் மிகுந்த சாகசக்காரன்'- `பொன்னியின் செல்வன்’ படத்தின் வந்தியத்தேவன் லுக் வெளியீடு

’பொன்னியின் செல்வன்’ படத்தின் வந்தியத்தேவன் தோற்றத்தைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

கல்கியின் புகழ்பெற்ற ’பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாக இருக்கிறது. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இந்தப்படத்தின் நடித்துள்ள நடிகர்களின் தோற்றங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. முதலாவதாக பட்டத்து இளவரசர் ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரமின் புகைப்படம் வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தியின் தோற்றம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘ராஜ்ஜியமில்லாத இளவரசன், உளவாளி, துணிச்சல் மிகுந்த சாகசக்காரன்... இதோ வந்தியத்தேவன்’ என்று படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

’பொன்னியின் செல்வன்’ நாவலில், ஆதித்ய கரிகாலன், தன் தந்தைக்கு அனுப்பும் செய்தியை கொண்டு செல்லும் வந்தியத்தேவன், வழிகளில் சந்திக்கும் சம்பவங்கள்தான் முக்கிய நிகழ்வுகளாக இருக்கும். இந்தக் கதையில் வந்தியத்தேவனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. வந்தியத்தேவன் தோற்றத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in