மகேஷ் பாபு வாங்கிய காஸ்ட்லி கார்: விலை இவ்வளவா?

மகேஷ் பாபு வாங்கிய காஸ்ட்லி கார்: விலை இவ்வளவா?

பிரபல நடிகர் மகேஷ் பாபு காஸ்ட்லி எலெக்ட்ரானிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவர் மகேஷ்பாபு. இவர் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ’ஸ்பைடர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்போது ’சர்க்காரு வாரி பாட்டா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பரசுராம் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். அவர் இசையில் வெளியான பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்தப் படம் மே மாதம் 17-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து ராஜமவுலி இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் புதிய ஆடி இ-ட்ரான் காரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.1.19 கோடி என்று கூறப்படுகிறது.

புதிய ஆடி இ-ட்ரான் காருடன் தான் நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிந்துள்ள நடிகர் மகேஷ்பாபு, ஆடி அனுபவம் உற்சாகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.